தனி ஆளாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினரை எதிர்த்த பயங்கரவாதி
இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதி ஒருவர் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மேற்குக் கடற்கரையின் வடக்குப்பகுதியில் உள்ள தெய்ர் ஷராஃப் கிராமத்தின் நுழையிலில் காவலில் ஈடுபட்டு வந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பலஸ்தீனருக்கும் பாதிப்பு
அத்தோடு, குறித்த நபரின் தாக்குதலினால் பலஸ்தீன பலரும்கூட பாதிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பலஸ்தீனர்களுக்கு இராணுவ மருத்துவர்கள் மற்றும் மேகன் டேவிட் அடோம் மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
உயிர் தப்பிய இராணுவ வீரர்
மேலும், தாக்குதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர் ஒருவரின் தலைக்கவசத்தில் குண்டு பாய்ந்ததாகவும், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

அதேவேளை, தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பயங்கரவாதி இஸ்ரேல் இராணுவ கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்! |
ஜே.விபியால் தேசிய மக்கள் சக்திக்கு ஏற்படப்போகும் இறுதி பேரழிவு 11 மணி நேரம் முன்