பாகிஸ்தானின் விமானப்படைப் பயிற்சித் தளம் மீது பயங்கரவாதத் தாக்குதல்
Pakistan
By Sathangani
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானப்படைக்கு சொந்தமான மியான்வாலி பயிற்சித் தளம் மீது, இன்று (04) காலை ஆயுதமேந்திய பயங்கரவாத குழு திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.
பாதுகாப்பு நிறைந்த இந்த தளத்தின் மீது சற்றும் எதிர்பார்க்காத நிலையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, பாதுகாப்புப்படையில் இருந்த வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தினர்.
சுட்டு வீழ்த்தப்பட்ட மூவர்
இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டதுடன் மூன்று பேர் சுற்றிவளைக்கப்பட்டனர்.
இருந்த போதிலும், மூன்று விமானங்கள் சேதமடைந்துள்ளதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதேவேளை பாகிஸ்தான் பாதுகாப்புப்படை நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை அகற்றுவதில் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி