ஜம்மு காஷ்மீர் காவல்துறை மீது பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் - இருவர் பலி
ஜம்மு காஷ்மீர் காவல்துறை மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறிநகரின் புறநகர் பகுதியில் இந்திய ரிசர்வ் காவல்துறையினர் 14 பேர் பயணம் செய்த பேருந்து மீது நேற்று மாலை பயங்கரவாதிகள் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பத்தில் இரண்டு காவல்துறையினர் உயிரிழந்துள்ளதுடன்12 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த அனைவரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும்,சிகிச்சை பெறுபவர்களில் நான்கு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்டுவருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
#SrinagarTerrorAttack: Among the injured police personnel, 01 ASI & a Selection Grade Constable #succumbed to their injuries & attained #martyrdom. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/VPe0Pwoyfy
— Kashmir Zone Police (@KashmirPolice) December 13, 2021