இன்று அதிகாலை கட்டுநாயக்கவில் கைதான வெளிநாட்டு பிரஜை
குஷ் போதைப்பொருளுடன் நாட்டிற்குள் நுழைய முற்பட்ட வெளிநாட்டு விமானப் பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய (BIA) வளாகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு (Customs Narcotics Control Unit) அதிகாரிகளால் வருகை முனையத்தில் வைத்து சந்தேக நபர் இன்று (05) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேக நபர் 34 வயதுடைய தாய்லாந்து (Thailand) நாட்டவர் எனவும், தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்கவிற்கு வந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
52 மில்லியன் ரூபா பெறுமதி
இந்த நிலையில் அவர் கொண்டு வந்த பயணப் பொதியில் உணவுப் பொட்டலங்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 05 கிலோகிராம் மற்றும் 200 கிராம் குஷ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் கொண்டுவந்த போதைப்பொருளின் மதிப்பு சுமார் 52 மில்லியன் ரூபா என சுட்டிக்காட்டப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் கட்டுநாயக்க விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும் 2 நாட்கள் முன்
