தாய்லாந்து பிரதமரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Thailand
World
By Thulsi
தாய்லாந்து (Thailand) நாட்டின் பெண் பிரதமர் ஷினவத்ராவின் (Paetongtarn Shinawatra) சொத்து மதிப்பு 3500 கோடி இந்திய ரூபா என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து பிரதமர் நேற்று (03.01.2025) தனது சொத்து மதிப்பை அறிவித்துள்ளார்.
இச்சொத்து பட்டியலை தேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையத்திடம் அவர் தெரிவித்துள்ளார்.
சொத்து மதிப்பு
தாய்லாந்து நாட்டின் பெண் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா (38) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரதமர் பதவியை ஏற்றுள்ளார்.
இவர் முன்னாள் பிரதமரும், மிகப்பெரிய தொழில் அதிபருமான தக்சின் ஷினவத்ராவின் இளைய மகள் ஆவார்.
அதன்படி பேடோங்டர்ன் ஷினவத்ராவின் சொத்து மதிப்பு 3500 கோடி இந்திய ரூபா ஆகும்.
இதில் 17 கோடி இந்திய ரூபா மதிப்பில் 200 டிசைனர் பைகளும், 42 கோடி இந்திய ரூபா மதிப்பில் உயர்ரக கைக்கடிகாரங்களும் இடம் பெற்றுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம்
3 வாரங்கள் முன்விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி