தாய்லாந்து பௌத்த தேரர்களின் பாத யாத்திரை திருமலையில் இருந்து ஆரம்பம்
Thailand
Buddhism
By Vanan
திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று (15) ஆரம்பமானது.
இதில் 50 இற்கும் மேற்பட்ட தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் பங்கேற்றனர்.
பலத்த பாதுகாப்பு
இதனால், திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மக்கள் விருந்துபசாரம் வழங்கி வரவேற்பளித்து வருகின்றனர்.
தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருட பூர்த்தியை முன்னிட்டு இந்நிகழ்வு இடம் பெற்று வருகின்றது.
திருகோணமலையில் இருந்து பிரதான வீதி ஊடாக கண்டியை நோக்கி இப் பாத யாத்திரை 10 நாட்களுக்குள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி