தையிட்டி விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு : யாழில் அநுர அதிரடி!
தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழில் (Jaffna) இன்று (17) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, “திஸ்ஸ விகாரையை மையமாக வைத்து ஒரு பிரச்சினை இருக்கின்றது.
நான் சமீபத்தில் நடந்த நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் திஸ்ஸ விகாரை பிரச்சினையை மிகவும் இலகுவாக முடிவுக்கு கொண்டு வரலாம் எனக் கூறினேன்.
அந்தப் பிரச்சினையை மையமாகக் கொண்டு செயற்படும் வடக்கு அரசியல் அந்தப் பிரச்சினையிலிருந்து விலக வேண்டும். அத்துடன் அந்தப் பிரச்சினையை வைத்துக் கொண்டு தென்னிலங்கையில் செய்கின்ற அரசியலை நிறுத்த வேண்டும்.
திஸ்ஸ விகாரையில் தங்கியுள்ள அரசியலை நீக்குவதன் மூலம் தான் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். அந்த விகாரையில் இருக்கின்ற பௌத்த பிக்கு, அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற பிரஜைகள் மற்றும் நாக விகாரையின் பௌத்த பிக்கு ஆகியோர் சேர்ந்து இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியும்.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
