யாழ். குடாநாட்டின் தீவுகளால் தஞ்சாவூருக்கு ஏற்படப்போகும் ஆபத்து
இந்தியாவின் (India) தஞ்சாவூரைக் (Thanjavur) கண்காணிப்பதற்கு யாழ் குடாநாட்டின் (Jaffna) தீவுகள் தான் சீனாவிற்கு(China) தேவைப்படுவதாக பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையின் எந்தப் பகுதியும் தொடர்பாடலுக்கு சிறந்தது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தஞ்சாவூர் விமான நிலையத்தைக் கண்காணிப்பதற்கு வடபகுதியிலுள்ள தீவுகள் பொருத்தமானதாக இருக்கும். கச்சதீவில் கூட சீனா கண் வைத்திருந்தது என்பது யாவரும் அறிந்த உண்மை.
கொழும்பு துறைமுக நகரத்தில் அமைந்துள்ள தாமரைக் கோபுரமும் கூட இந்தியா மீது உளவு பார்ப்பதற்கான சீனாவின் திட்டம் தான்.
வடக்கு கிழக்கில் கூட சீனா தங்களுடைய நிலைகளை பலப்படுத்த விரும்பியது. அத்துடன் மூன்று தீவுகளைக் கூட தங்களுக்காக கேட்டிருந்தார்கள். இந்தியாவினுடைய கடும் எதிர்ப்பினால் அது கைவிடப்பட்டது.
சீனாவைப் பொறுத்த வரையில் இலங்கையில் ஒரு பகிரங்கமான படைத்தளத்தை எப்போதும் அமைக்க முடியாது.“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |