கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு! (படங்கள்)

Tamils Jaffna Kilinochchi
By Pavan Dec 09, 2022 02:49 PM GMT
Report

வைத்திய கலாநிதி கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்தவம் என்ற நூல் வெளியீடு கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.

ஒரு பெண் பூப்பெய்துவது தொடக்கம் மாத சுகயீன நிறுத்தம் வரையில் எதிர்கொள்ளும் பல்வேறு மாற்றங்களை குறித்து ஆராயும் இந்த நூல் வடக்கு கிழக்கின் ஒவ்வொரு வீடுகளிலும் பேணிப் படிக்க வேண்டியதாகும்.

மருத்துவர் ஏ. திலீபன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் அணிந்துரையை மருத்துவர் வை. சிவகரன் நிகழ்த்த, வாழ்த்துரையை யாழ் பல்கலைக்கழக பொறியில் பீட பீடாதிபதி கே. பிரபாகரன் வழங்கினார்.

தாம் பொறியல் துறையை சார்ந்தவர் என்ற போதும் இந்த நூலின் உள்ளடக்கம் மற்றும் வெளிப்பாடு தமக்கு பல விடயங்களை இலகுவாக உணர்த்தியுள்ளதாக தனது வாழ்த்துரையில் திரு பிரபாகரன் குறிப்பிட்டார்.

தந்தைமார்களுக்கும் உரியது 

கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு! (படங்கள்) | Thayakiya Thaniththuvam Book Publication

இதேவேளை, இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், இந்த நூல் தாய்மார்களுக்கு மாத்திரமின்றி தந்தைமார்களுக்கும் உரியது என்றும் அதனை அவர்கள் படிக்கும் போது பல மாற்றங்கள் உருவாகும் என்றும் கூறியதுடன் போருக்குப் பிந்தைய காலத்தில் மருத்துவர் குருபரன் கிளிநொச்சியில் ஆற்றிய பணிகளையும் நினைவு கூர்ந்தார்.

மேலும், இந்த நூலுக்கான ஆய்வுரையை நிகழ்த்திய மருத்துவர் சிவரதன், இந்த நூலை கிளிநொச்சியில் வெளியிடுவது சிறந்த விடயம் என்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் யாழ் மாவட்டத்திற்குள் முடங்கி இருப்பதாக தோன்றுவதாகவும் கூறினார்.

போரால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலேயே மருத்துவ பீடத்தின் சேவைகளும் ஆய்வுகளும் அவசியமாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு! (படங்கள்) | Thayakiya Thaniththuvam Book Publication

இதேவேளை, தமிழ் மருத்துவம், மருத்துவத் தமிழ் என்பதுடன் மருத்துவத் தமிழ் இலக்கியம் என்பது குறித்தும் மருத்துவர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் நந்தி இந்த வழியில்தான் மக்கள் மத்தியில் மருத்துவக் கருத்துக்களை விதைத்ததாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன் எளிய தமிழில் நூலாசிரியர் கந்தையா குருபரன், இந்த நூலை படைத்தளித்தமை பாராட்டுக்குரியது என்றும் தெரிவித்துள்ளார்.

நூலினை கிளிநொச்சி மகா வித்தியாலய அதிபர் திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் வெளியிட மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் பெற்றுக்கொண்டார்.

கிளி பீப்பிள் அமைப்பு அனுசரனை

கிளிநொச்சியில் வெகு சிறப்பாக இடம்பெற்ற தாயாகிய தனித்தவம் நூல் வெளியீடு! (படங்கள்) | Thayakiya Thaniththuvam Book Publication

சிறப்புப் பிரதிகளை கிளிநொச்சி திருவையாறு மகா வித்தியாலய அதிபர் திரு விக்கினேஸ்வரன், வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய அதிபர் பங்கயற்செல்வன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நூலாசிரியர் கலாநிதி கந்தையா குருபரன் ஏற்புரை ஆற்றிய வேளை, மக்களுடன் மருத்துவசேவையை ஆற்றுகின்ற போது ஏற்பட்ட அனுபவங்களில் இருந்தே இந்த நூலை ஆக்கியதாகவும் வடக்கு கிழக்கில் மகப்பேறு மற்றும் தாய்மையியல் சார்ந்த கருத்துக்களை கொண்டு சேர்க்கும் பணிக்கு கிளி பீப்பிள் அமைப்பு அனுசரனை அளித்தமை நன்றிக்கும் மகிழ்வுக்கும் உரியது என்றும் கூறினார்.

கிளி பீப்பிள் அமைப்பின் வெளியீடான தாயாகிய தனித்துவம் நூல் வெளியீட்டு நிகழ்வில், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மருத்துவமாதுக்கள், உளவளத்துணை பணியாளர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தமை முக்கிய அம்சமாகும்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016