வெளிநாட்டு வேலைக்காக சென்றவரை இடையிலேயே நிறுத்திய விபத்து
வெளிநாட்டு வேலைக்காக புறப்படுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த நபரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டி பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த நிலையில், புத்தளம் (Puttalam) - சிலாபம் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் பேருந்தில் முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் மூவர் படுகாயமடைந்து சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முந்தலம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மதுரங்குளிய கரிகட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த குழுவினரே விபத்தில் சிக்கியுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
புத்தளத்திலிருந்து சிலாபத்தை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று முந்தலம வைத்தியசாலைக்கு முன்பாக பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டதில் முச்சக்கரவண்டி பேருந்துடன் மோதியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், முச்சக்கரவண்டி சாரதி, வெளிநாடு செல்வதற்காக பயணித்த நபர் மற்றும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் முந்தலம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஆனையிறவில் மகிந்த துவக்கிய அடையாள அழிப்பை அநுர தொடரும் முயற்சியா ! 12 மணி நேரம் முன்
