முன் ஜென்ம பந்தம் என்பது இதுதானா..! சிறுவனின் செயலால் அதிர்ச்சி
சிரிய(syria) எல்லையில் உள்ள ஹோலன் குன்று பகுதியில் பிறந்த சிறுவன் தனது மூன்றாவது வயதில் தனது முன்னைய பிறவியில் கோடாரியால் தாக்கி கொலை செய்யப்பட்டதாக கூறி புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டிய நிலையில் அதனை தோண்டிப்பார்த்தபோது அனைவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இந்த சிறுவன் பிறக்கும்போதே நெற்றியில் பெரிய சிவப்பு நிற தழும்புடன் பிறந்துள்ளான். அந்த குழந்தையை பார்த்ததுமே, வீட்டில் இருந்த பெரியவர், இது நிச்சயம் முன் ஜென்மத்தில் அந்தக் குழந்தைக்கு நேரிட்ட ஏதோ ஒரு சம்பவத்தின் தொடர்புதான் என்று கூறியிருந்தார்.
புதைத்த இடத்திற்கு அழைத்துச் சென்ற சிறுவன்
ஒரு குழந்தை பிறக்கும்போது, அதன் உடலில் இருக்கும் ஏதேனும் அடையாளம், அதன் முந்தைய ஜென்மத்தில் அது பெற்றதாக இருக்கும் என்பது ட்ரூஸ் இன மக்களின் நம்பிக்கை.
இவ்வாறு அந்த பெரியவர் தெரிவித்த நிலையில் , முன்ஜென்மத்தில் என்னை சிலர் கோடாரியால் தாக்கிக் கொன்றுவிட்டார்கள் என்றும், தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகவும் கூறி குடும்பத்தினரை ஓரிடத்துக்கு சிறுவன் அழைத்துச் சென்றுள்ளான்.
தான் முன்ஜென்மத்தில் வாழ்ந்த கிராமத்துக்குச் சென்றதும் சிறுவனுக்கு அனைத்தும் நினைவில் வந்து, முன்ஜென்மத்தில் தனது பெயர் என எல்லாவற்றையும் சொல்லியிருக்கிறார். அந்த கிராமத்தினரும், சிறுவன் சொல்லும் பெயரில் இருந்தவர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டதாகக் கூறியிருக்கிறார்கள்.
சிறுவனை புதைத்த இடத்தில் கிடந்த எலும்புக்கூடு
அப்போதுதான், அந்த சிறுவன், தன்னைக் கொன்றுவிட்டதாகவும், அவர்களது பெயர்களையும், யார் என்ற விவரத்தையும் கூறியுள்ளார். ஆனால், குற்றவாளிகள் தாங்கள் கொலை செய்யவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
உடனே சிறுவன் தன்னைப் புதைத்த இடத்தைக் காட்டுவதாகக் கூறி அழைத்துச் சென்றிருக்கிறார். அவர் காட்டிய இடத்தில் தோண்டியபோது, அங்கு ஒரு எலும்புக்கூடு இருந்ததும், அதன் மண்டைஓட்டில் கோடாரியால் வெட்டிய தடயம் இருந்ததும், அதே அடையாளம், சிறுவனின் நெற்றியில் இருந்ததையும் பார்த்து கிராம மக்கள் ஆச்சரியம் அடைந்துள்னனர்.
உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 4 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்