இரு சகோதரர்களுக்கு இடையில் மோதல் - ஒருவர் பலி!
இரத்தினபுரி - எம்பிலிபிட்டி பகுதியில் இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த மோதல் சம்பவத்தில் கொலை செய்யப்பட்ட நபரின் குழந்தையை, சந்தேகநபரின் வீட்டிலுள்ள நாய் கடித்துள்ளது . இந்நிலையில், ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, சந்தேகநபரின் மனைவி மீது கொலை செய்யப்பட்ட நபர் கூரிய ஆயுதத்தினால் தாக்கியுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த சந்தேகநபர் தனது மூத்த சகோதரனின் கையிலிருந்த ஆயுதத்தால் அவரை தாக்கி கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தில் காயமடைந்த சந்தேகநபரின் மனைவி, எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் எம்பிலிபிட்டி பகுதியைச் சேர்ந்த 41 வயதான ஒருவரே உயிரிழந்துள்ள நிலையில், 27 வயதான சந்தேகநபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பணாமுர காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
