மரணத்தில் முடிந்த நத்தார் விருந்து
Sri Lanka Police
Christmas
Sri Lanka Police Investigation
By Jaso
வெலிக்கடை, வல்பொல, விஜித புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் (25) பிற்பகல் இடம்பெற்ற நத்தார் விருந்தின் போது ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளதாக வெலிக்கடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
நத்தார் விருந்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

வல்பொல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
அங்கொடையை சேர்ந்தவர் கைது
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் அங்கொடையைச் சேர்ந்த (62) என்பவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
4ம் ஆண்டு நினைவஞ்சலி