இலங்கையில் மதுபான விற்பனைக்கு வந்த நெருக்கடி
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Sri Lankan Peoples
India
By Sumithiran
மது விற்பனை செய்வதில் நெருக்கடி
கலால் திணைக்களத்தில் மதுபான போத்தல்களுக்கு ஒட்ட பயன்படுத்தும் ஸ்டிக்கர்கள் இல்லாததால், மது விற்பனை செய்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளின் தரத்தை உறுதி செய்யும் இந்த ஸ்டிக்கர்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பணப்பரிவர்த்தனை நெருக்கடியால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
ஸ்டிக்கர்களுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு
தயாரிப்பின் கலவை, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வரி செலுத்துதல் மற்றும் தயாரிப்பு அளவு ஆகியவை இந்த ஸ்டிக்கரில் குறிப்பிடப்படும்.
எனினும், இந்தியாவில் இருந்து இந்த ஸ்டிக்கர்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் கலால் ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி