உக்ரைனுக்கு எலான் மஸ்க் வைத்த செக்: நகர முடியாமல் தவிக்கப்போகும் இராணுவம்!
உக்ரைனிய இராணுவத்தின் முதுகெலும்பாக இருக்கும் தனது ஸ்டார்லிங்க் (Starlink) அமைப்பை தான் முடக்கினால் உக்ரைன் (Ukraine) பாதுகாப்பு அமைப்பின் முழு முன்னணி வரிசையும் சரிந்துவிடும் என டொனால்ட் ட்ரம்பின் நெருங்கிய நண்பர் எலான் மஸ்க் (Elon Musk) எச்சரித்துள்ளார்.
ரஷ்ய மீதான உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் (Volodymyr Zelenskyy) நிலைப்பாடு தொடர்பில் எலான் மஸ்க் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்த நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
உக்ரைனின் இராணுவ தகவல் தொடர்புகளைப் பராமரிப்பதில் இன்றியமையாததாக ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய அமைப்பு காணப்படுகிறது.
ரஷ்ய படையெடுப்பில் ஏற்பட்ட பாதிப்பு
2022 பெப்ரவரியில் ரஷ்யா படையெடுத்ததிலிருந்து உக்ரைனின் நிலையான இணைப்பு மற்றும் தொலைத்தொடர்பு வலையமைப்புகளும் குண்டுவீச்சினால் மோசமாக சேதமடைந்துள்ளன.
இந்த நிலையில், சேதமடைந்துள்ள தொலைதொடர்பு வலையமைப்புகளின் வெற்றிடத்தை நிரப்புவதற்கு உக்ரைனுக்கு ஸ்டார்லிங்க் இணைய அமைப்பு உதவியுள்ளது.
தற்போது, அது அந்நாட்டின் சில பொதுமக்களுக்கும் கிடைத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், பிரதானமாக ஸ்டார்லிங்க் இணைய அமைப்பு உக்ரைனின் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்படுகின்றன, அவை கடுமையான சமிக்ஞை நெரிசல் மற்றும் முன்னணி வரிசையில் தகவல் தொடர்புகளை அனுப்புவதற்கும் பெறுவதற்கும் உதவியாக இருக்கிறது.
மஸ்க்கின் எச்சரிக்கை
மேலும், உக்ரைன் இராணுவம் தாக்குதல் ட்ரோன்களை வழிநடத்த ஸ்டார்லிங்கையும் பயன்படுத்தியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் உக்ரைனுக்கு ஸ்டார்லிங்கை வழங்க நிதியளிக்க உதவியது, பின்னர் அமெரிக்க அரசாங்கம் பொறுப்பேற்றது, இருப்பினும் கடந்த மாதம் போலந்து உக்ரைனின் ஸ்டார்லிங்க் கட்டணங்களை தொடர்ந்தும் செலுத்துவதற்கு முன்வந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், உக்ரைனிய இராணுவத்தின் முதுகெலும்பாக இருக்கும் தனது ஸ்டார்லிங்க் இணைய அமைப்பை முடக்கினால் உக்ரைன் பாதுகாப்பு அமைப்பின் முழு முன்னணி வரிசையும் சரிந்துவிடும் என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
5 நாட்கள் முன்