நடன ஆசிரியரின் இழிவான செயல் :தப்பியோடிய சிறுவன்
தனது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க உதவிபுரியுமாறு தெரிவித்து 12 வயது சிறுவனை வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற நடன ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் பிலியந்தலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வகுப்பு முடிந்து வீடு சென்று கொண்டிருந்த சிறுவனை
பயிற்சி வகுப்பு முடிந்து வீடு சென்று கொண்டிருந்த 12 வயது சிறுவனை நடன ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி தனது நண்பரின் வீட்டை கண்டுபிடிக்க உதவுமாறு சிறுவனிடம் கோரியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சிறிது தூரம் சென்ற நிலையில் நடன ஆசிரியர் சிறுவனின் கையை பிடித்து தனது அந்தரங்கப் பகுதிக்கு கொண்டு சென்று சிறுவனை வன்புணர்வு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சிசிடிவி கமராவில் பதிவாகி
சந்தேகநபர் சிறுவனுடன் பயணித்த விதம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளதுடன், வீதியொன்றுக்கு அருகில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து அவர் எரிபொருள் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்விடத்தை விட்டு வெளியேறிய சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை வெறிச்சோடிய வீதியை நோக்கி செலுத்த முற்பட்ட நிலையில் அச்சமடைந்த சிறுவன் அலறியதால் அவரை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
ஆசிரியர் கைது
சம்பவம் தொடர்பில் சிறுவனின் பெற்றோர் பிலியந்தலை காவல் நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து 27 வயதுடைய சந்தேகத்திற்குரிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடன வகுப்பொன்றை நடத்தி பல சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட நடன ஆசிரியரின் பிரதான உதவியாளர் தெரிவித்துள்ளார். சந்தேகநபர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |