மிகப்பெரிய தந்தம் கொண்ட யானை உயிரிழப்பு...!
Sri Lanka
Tourism
Elephant
By Pakirathan
இலங்கையின் யால தேசிய சரணாலயத்தில் இருந்த மிகப்பெரிய தந்தத்தைக் கொண்ட 'தல கொட்டா' எனப்படும் யானை உயிரிழந்துள்ளது.
40 வயதுடைய இந்த யானை நீண்ட காலமாக நோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சிகிச்சை அளித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நேற்று முன்தினம் லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்திற்கு அருகாமையில் உயிரிழந்த நிலையில் குறித்த யானையின் உடல் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த யானை
யால தேசிய சரணாலயத்திற்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்த மிருகங்களில் இந்த யானையும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி