பிரித்தானிய வைரஸை விட இந்தியாவின் “டெல்டா” ஆபத்தானது! ஸ்கொட்லாந்து ஆய்வில் தகவல்
பிரித்தானியாவில் பரவிய உருமாறிய கொரோனா வைரஸை விட இந்தியாவில் பரவிய “டெல்டா” வைரஸ் ஆபத்தானது என்று ஸ்கொட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.
இந்த மாறுபாட்டால் மருத்துவமனைகளில் சேர்க்கப்படுவது இரட்டிப்பாக்குகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் எதிர்வரும் 21ஆம் திகதி நீக்கப்படவிருந்த கட்டுப்பாடுகள் டெல்டா வைரஸால் மீண்டும் நீடிக்கப்பட்டது.
எனினும் சில தளர்வுகள் இருந்தன. இந்த தளர்வுகளுடனான கட்டுப்பாடுகள் டெல்டா வைரஸ் பரவல் காரணமாக மேலும் நீடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டெல்டா வைரஸ் பிரித்தானியாவில் உருமாற்றம் அடைந்த ஆல்ஃபா வைரஸை விட மருத்துவமனையில் சேர்க்கும் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குகிறது.
இது குறித்து ஸ்கொட்லாந்தில் உள்ள ஸ்டார்ச்லைட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஸ்கொட்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 134 பேர் டெல்டா கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள்.
எனினும் நீங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருந்தால் இதனைத் தடுக்கலாம். நீங்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸை எடுத்துக்கொண்டோ அல்லது ஒரு டோஸை எடுத்துக்கொண்டு 28 நாட்களைக் கடந்த பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் நீங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதைத் தடுப்பூசிகள் 70% தடுக்கின்றன.
பைஸர் 79%, கோவிட்ஷீல்ட் 60% டெல்டா வைரஸுக்கு எதிராக எதிர்ப்பாற்றலைத் தருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.