முற்றியது வாக்குவாதம் -மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
Sri Lanka Police
Attempted Murder
Crime
By Sumithiran
வீட்டில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் மகனை,தந்தையொருவர் கத்தியால் வெட்டிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
பசறை - கோனகெலே தோட்டத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றதுடன் கத்தியால் வெட்டிய தந்தையும் இன்று (9) கைது செய்யப்பட்டதாக பசறை காவல்துறையினர் தெரிவித்தனர்.
பசறை - கோனகெலே வத்தை, ரெண்டபொல பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல்துறையினர் மேலதிக விசாரணை
தந்தையால் வெட்டப்பட்டதில் பலத்த காயமடைந்த மகன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பசறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்