சீனாவிடமிருந்து கடனைப்பெற்றதால் ஏற்பட்ட சிக்கல்
Sri Lanka
IMF Sri Lanka
China
By Sumithiran
சீனாவிடம் இருந்து இலங்கை பெற்ற கடன்
சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தையின் போது சீனாவிடம் இருந்து இலங்கை கடன் பெற்றமையால் நிலைமை சிக்கலானதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடனில் சுமார் 15% சீனாவிடமிருந்து பெறப்பட்டதுடன்,தற்போதைய நாட்டின் பொருளாதார நெருக்கடியான நிலையில் இலங்கைக்கான கடனை மறுசீரமைக்க சீனா இன்னும் இணங்கவில்லை.
சர்வதேச நாணய நிதியம்
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கைக்கு நிதியுதவி வழங்கினால், சீனாவிற்கு கடனை செலுத்துவதற்கு இலங்கை அதனை பயன்படுத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடனை திருப்பி செலுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

