மாவீரர் தின கைது : அரசின் முதிர்ச்சியடையா தன்மையின் வெளிப்பாடு :பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி காட்டம்
மாவீரர் நிகழ்வை முன்னெடுத்துச் சென்ற மூன்று சமூக வலைத்தள செயற்பாட்டாளர்களை கைது செய்ததன் மூலம் சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அரசியல் நேர்மை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி(Nirmal Devasiri)தெரிவித்துள்ளார்.
சவால்களை எதிர்கொள்வதில் அரசாங்கம் எந்தவித பக்குவத்தையும் காட்டவில்லை எனவும் இவ்வாறான நடவடிக்கைகளின் பலனை அரசாங்கம் மட்டுமன்றி அரசாங்கத்தின் நியமனத்திற்காக நின்றவர்களும் அனுபவிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுக்கு மக்கள் வழங்கிய பாரிய அதிகாரம்
ஒருவரைக் கைது செய்வதன் மூலம் பொய்ப் பிரசாரங்களை கட்டுப்படுத்த முடியும் என நினைப்பது தவறானது எனவும், பொய்ப் பிரசாரங்களால் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் எனவும் நினைப்பது தவறானது எனவும் தற்போதைய அரசாங்கத்திற்கு பாரிய அதிகாரத்தை மக்கள் வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
பேராசியர் தேவசிறி இணைய சனல் மூலம் ஒரு காணொளியை வெளியிட்டு, தற்போதைய அரசாங்கத்தை விட நிலையான புகழ் பெற்ற ராஜபக்ச அரசாங்கத்தின் அழிவையும் இது போன்ற அரச அடக்குமுறைகள் பாதித்ததாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |