ரஷ்ய பிரஜைக்கு நிகழவிருந்த பேரனர்த்தம் - காப்பாற்றிய சுற்றுலா வழிகாட்டிகள்
Sri Lanka Tourism
Sri Lanka
Russian Federation
By Sumithiran
மொரகல்ல கடற்கரையில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய நிலையில் அருகில் இருந்த மூன்று சுற்றுலா வழிகாட்டிகளால் அவரைக் காப்பாற்றியுள்ளனர்.
குறித்த ரஷ்யர் நாட்டுக்கு வந்து மொரகல்ல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற போது கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
உயிரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்ட ரஷ்ய பிரஜை
அப்போது, சுற்றுலாப் பயணி தனது உயிரைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டார், மேலும் பல சுற்றுலாப் பயணிகள் அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் அது பலனளிக்கவில்லை.
இச்சம்பவத்தை பார்த்ததும் கடற்கரைக்கு அருகில் தங்கியிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் 3 பேர் கடலில் குதித்து சுற்றுலா பயணியை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பத்திரமாக கரைக்கு கொண்டு வந்தனர்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி