எம்.பியின் பாதுகாவலரின் பிஸ்டல் மாயம்
இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அகில சாலிய எல்லாவலவின் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கி (பிஸ்டல்) காணாமல் போயுள்ளதாக பாதுகாப்பு உத்தியோகத்தர் பலாங்கொடை காவல் நிலையத்தில் இன்று (14) முறைப்பாடு செய்துள்ளார்.
சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றும் அதிகாரி, பலாங்கொடையில் உள்ள அகில சாலிய எல்லாவலவின் வீட்டின் பாதுகாப்பு பிரிவிற்கு சொந்தமான அறையில் துப்பாக்கியை ஒரு பையில் வைத்துவிட்டு சில நாட்களுக்கு முன்னர் விடுமுறையில் சென்றுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பணிக்கு திரும்பிய போது துப்பாக்கி கிடைக்காததால் இது தொடர்பில் பலாங்கொடை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பலாங்கொடை காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜயதிஸ்ஸவின் பணிப்புரையின் பிரகாரம் குற்றப்பிரிவு காவல்துறை பரிசோதகர் புஸ்பகுமார உள்ளிட்ட அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.