எகிறும் விலைவாசி - கனேடிய மக்களின் குமுறல்
கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் விலைவாசி உயர்வுக்கு கனேடிய மக்கள் தற்போது முகம் கொடுத்து வருகின்றனர். இதனால் தமது குடும்பத்தினருக்கு போதிய வகையில் உணவளிக்க முடியவில்லை என பெரும்பான்மை கனேடிய மக்கள் குமுறுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 57% கனேடிய மக்கள் தங்கள் குடும்பத்தினருக்கு போதிய உணவளிக்க முடியாத அளவுக்கு விலைவாசி அதிகரித்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
2019ல் இதேபோன்று நடத்தப்பட்ட ஆய்வில் 36% மக்களே அவ்வாறான ஒரு நிலையை எதிர்கொள்வதாக குறிப்பிட்டிருந்தனர். புதன்கிழமை வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின் அடிப்படையில், 2020 டிசம்பர் முதல் 2021 டிசம்பர் வரையான காலகட்டத்தில் கனடாவில் சமையல் எண்ணெய் விலை 41.4% அதிகரித்துள்ளது.
வெள்ளை சக்கரையின் விலை 21.6% அதிகரித்துள்ளது.
மேலும், கடன் பிரச்சனைகள், குடியிருப்புக்கான கட்டணங்கள், உணவுப் பொருட்களின் விலை, வருவாய் மற்றும் நிதி நிலை உட்பட அனைத்து காரணிகளையும் ஆய்வுக்கு உட்படுத்தியதில், 98% மக்கள் தங்கள் குடும்பங்களுக்கு போதிய உணவளிக்க முடியாது திணறுவதாக தெரிய வந்துள்ளது.