யாழில் 13 வயது சிறுமியை வேலைக்கமர்த்திய பெற்றோர்: நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு
உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு யாழ்ப்பாண காவல்துறையினருக்கு யாழ் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கிளிநொச்சி திருமுருகண்டி பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் யாழ் நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு பொருட்கள் காலாவதியாகியவை என தெரியவந்துள்ளது.
இதையடுத்து யாழ்ப்பாண காவல்துறையினரால் குறித்த சிறுமி கைது செய்யப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பெற்றோர் கைது
மேலும் சிறுமியிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் திருமுருகண்டி பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து தினமும் உணவு பொருட்களுடன் பிற்பகல் 1.30 மணியளவில் பேருந்து ஏறி யாழ்ப்பாணம் வந்து அவற்றை விற்பனை செய்து விட்டு மீண்டும் இரவு எட்டு மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்தில் வீட்டுக்கு செல்வதாக கூறியுள்ளார்.
இது தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரால் குறித்த முறைப்பாடு யாழ் நீதவான் நீதிமன்றின் கவனத்திற்கு எடுத்துசெல்ப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, 13 வயது சிறுமியை தனியாக வேலைக்கு அமர்த்திய குற்றச்சாட்டில் பெற்றோர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்டுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |