இன்று இரவு நிலவில் ஏற்படவுள்ள மற்றம் : மக்களுக்கு கிடைத்த அறிய வாய்ப்பு
ஏப்ரல் மாதம் வரும் சூப்பர் மூனுக்கு பிங்க் மூன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு காரணம் நிலவு பிங்க் நிறத்தில் இருக்கும் என்பதில்லை.
கிழக்கு வட அமெரிக்காவில் வசந்த காலத்தின் ஆரம்ப கட்டத்தில் Moss pink என்ற பூ பூக்கும். அதே காலக்கட்டத்திலும், நேரத்திலும் இந்த நிலவு தோன்றுவதால் பிங்க் மூன் என்று அழைக்கப்படுகிறது.
பிங்க் நிலவு
ஏப்ரல் 12 - 13 அன்று வானில் தோன்றவுள்ள இந்த முழு நிலவு பிங்க் நிலவு என அழைக்கப்படும். உண்மையில் இது பிங்க் நிறத்தில் இருக்காது, அதன் இயல்பு நிறத்திலேயே காணப்படும்.
ஏப்ரல் 12ஆம் திகதி இரவு 8.23 மணியளவில் தொடங்குகிறது. தொடர்ந்து அடுத்த நாள் ஏப்ரல் 13 வரை நீடிக்கிறது.
ஏப்ரல் மாதம் 2025 ஆம் ஆண்டு பிங்க் மூன் இந்தியாவில் இருந்து தெரியும். இது சனிக்கிழமை, ஏப்ரல் 12, 2025 அன்று இரவு 8:22 EDT மணிக்கு, அதாவது ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 13, 2025 காலை 5:00 மணிக்கு இந்திய நேரப்படி தெரியும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
