வரலாறு காணாத எதிர்ப்பு பேரணி! சூடு பிடிக்கும் அரசியல் களம்
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க நிர்ப்பந்திக்கப்படும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
மகாசங்கம், தொழில் வல்லுநர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட முழு நாடும் தற்போது அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், அதற்கு ஆதரவாக எதிர்க்கட்சி இன்று வரலாறு காணாத எதிர்ப்பு பேரணியை நடத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,
