வைத்தியரின் முத்திரையை திருடி போதைப்பொருள் விற்பனை - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை
ஹொரணை தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் வைத்தியரிடமிருந்து உத்தியோகபூர்வ முத்திரையை திருடி அங்குருவாதொட்ட கல்பத்த பிரதேசத்தில் போதைக்கு அடிமையானவர்களுக்கு மாத்திரைகள் மற்றும் மருந்துகளை விற்பனை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த குற்றச்செயலுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர்(22 வயது) ஒருவர் கல்பத்த முல்கொடகந்த பிரதேசத்தில் வைத்து காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் இருந்து 7 கிராம் போதைப்பொருள், 20 வெவ்வேறு போதை மாத்திரைகள், ஒரு மருத்துவரின் உத்தியோகபூர்வ முத்திரை மற்றும் இரண்டு T56 துப்பாக்கி தோட்டாக்களை என்பனவற்றை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
போதைப்பொருள் விற்பனை
குறித்த சந்தேகநபர் மூலம் அங்குருவத்தோட்ட கல்பத்த வெலிகொடதமன பிரதேசத்தில் பணிபுரிபவர்களுக்கு பாரியளவில் போதைப்பொருள் விற்பனைசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகத்திற்கு இடமான போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு போதைப்பொருள் வழங்க முடியாத நிலையில், 500, 1000 ரூபா போன்ற பணத்தை பெற்றுக்கொண்டு போதைப்பொருள் விற்பனை நிலையங்களில் அதிக போதைப்பொருள்களை கொள்வனவு செய்வதும் விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
