இலங்கை மக்களுக்கான நீதி! பிரித்தானிய அரசுக்கு வலுக்கும் அழுத்தம்
இலங்கை மக்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை ஆதரிப்பது தொடர்பில் அரசாங்கம் இனியும் தாமதிக்காது செயற்படுவதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானிய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்பதாக வெளியுறவுத்துறை பொது நலவாய மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான நிழல் செயலாளர் டேவிட் லாம்மி தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இலங்கையில் சுய நிர்ணயம், சமாதானம் மற்றும் நீதிக்காக தமிழ் மக்கள் ஆற்றிய தியாகங்களை தைப்பொங்கள் தினமான இன்று தாம் நினைவு கூறுவதாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் ஸ்திரத்தன்மை
பிரித்தானியா மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை பொது நலவாய மற்றும் வளர்ச்சி விவகாரங்களுக்கான நிழல் செயலாளர் டேவிட் லாம்மி தைத்திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு தமிழ் சமூகங்களுடன் தோளோடு தோள் நின்று தமது சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து தொழிற்கட்சி அரசாங்கம் பணியாற்றும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பிரித்தானியாவிற்கு தமிழ் சமூகம் ஆற்றிவரும் மகத்தான பங்களிப்பிற்கு தொழிலாளர் கட்சியினர் நன்றிகளை தெரிவித்து கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |