வளர்ப்பு நாயின் காலை வெட்டி எறிந்த கொள்ளையர்கள்
தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் கொள்ளையடிக்க வந்த திருட்டு கும்பல், அந்த வீட்டில் வளர்த்த நாய் தொடர்ந்து அவர்களை பார்த்து குரைத்ததால் நாயின் காலை வெட்டிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் அளுத்கம பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இரவில் வீட்டின் பின்பக்க சுவர் வழியாக கொள்ளையர்கள் வீட்டிற்குள் நுழைய முயன்ற போதிலும், வீட்டில் இருந்த நாய் அவர்களை பார்த்து தொடர்ந்து குரைத்துள்ளது.சில நிமிடங்களுக்குப் பின்னர், நாயின் இடையூறுக்கு மத்தியில் வீட்டுக்குள் நுழைய முடியாத கொள்ளையர்கள், இறுதியில் கொள்ளையடிக்கும் எண்ணத்தை கைவிட்டுவிட்டு, நாயின் காலை வெட்டியுள்ளனர்.
காலையில் எழுந்த குடியிருப்பாளர்கள் தங்கள் வளர்ப்பு நாய் இரத்தக் கறைகளுடன் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதைக் கண்டு உடனடியாக மருத்துவ உதவியை நாடினர். அந்த நாய்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது, கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தால் நடத்தப்பட்ட தாக்குதல் என்று மருத்துவர் முடிவு செய்தார்.