மருமகனை மண்வெட்டியால் அடித்தே கொன்ற மாமா
Sri Lanka Police
Sri Lanka
Crime
By Sumithiran
மின்னேரியா ரொட்டாவ பிரதேசத்தில் குடும்ப தகராறு முற்றிய நிலையில் மாமனார் தனது மருமகனை மண்வெட்டியால் அடித்து கொலை செய்துள்ளதாக மின்னேரிய காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வீரவர்தன பண்டாரநாயக்க, ரொட்டாவ, கல்லோயா சந்தி, இலக்கம் 81 இல் வசித்து வந்த இஷார ஓஷாத் பண்டாரநாயக்க என்ற 32 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டை
இறந்தவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் சண்டையிட்டு வந்த நிலையில், சம்பவ தினத்தன்றும் இதேபோன்று மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.
அப்போது, மனைவி, குழந்தைகள் தலைமறைவாக இருந்த நிலையில் பக்கத்து வீட்டில் உள்ள தந்தை மகளின் வீட்டுக்குச் சென்றுள்ளார், அப்போது தகராறு முற்றவே, வீட்டில் இருந்த மண்வெட்டியால் மருமகனை தலையில் அடித்துக் கொன்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
