தமிழர்களை தீயிட்டு கொளுத்திய ஐக்கிய தேசிய கட்சியின் கொடூரர்கள்! கடுமையாகச் சாடிய சந்திரசேகர்
தமிழர்களுக்கான உரிமைகளை மறுத்து, யாழ். நூலகம் மீது தனது அரசியல் பழிவாங்கலை காட்டிய அரசியல் நாசகார வேலைகளை முன்னெடுத்த ஐக்கியதேசிய கட்சியினரின் பின்னல் இன்று தமிழர்களுக்கான உரிமை என போலி முகத்திரையில் பலர் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றில் கறுப்பு ஜூலை கலவரம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இதனை கூறியுள்ளார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
காமினி திசாநாயக்க
''அப்போதைய மகாவலி அமைச்சராக இருந்த காமினி திசாநாயக்க, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை முன்னெடுத்து, நாசகார அரசியலை மேற்கொண்ட ஒரு அரசியல்வாதி.

பதுளை நகரம் எரிக்கப்பட்டபோது, அப்போதைய இராணுவத்தினர் கடைகளை அடையாளமிட்டு சென்ற பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த விஷமிகள் அந்தக் கடைகளுக்கு தீ வைத்தனர்.
அங்கிருந்த பச்சிளம் குழந்தைகள்கூட தீயில் எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரச் செயல்களை மேற்கொண்டவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியினரே.
அது மட்டுமல்லாமல், தோட்டத் தொழிலாளர்களின் சொத்துக்களைக் கொள்ளையடித்து, அந்த நாசகாரச் செயல்களையும் மேற்கொண்டவர்கள் அதே ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களே.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
அதன் பின்னர், 1979 ஆம் ஆண்டு அவசரகாலச் சட்டத்தையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து, தமிழர்களுக்கு எதிராக திட்டமிட்ட அடக்குமுறைகளை முன்னெடுத்தனர்.
மேலும், வடக்கு - கிழக்கில் நடைபெறவிருந்த தேர்தலை ஒத்திவைத்து, ஜனநாயகச் செயல்முறையை பாதிக்கும் வகையில் மிகவும் கொடூரமான அரசியலை முன்னெடுத்தனர்.
அதன் பின்னர், தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்து, தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை அழிக்கும் செயல்களிலும் ஈடுபட்டனர்.
முதலில் யாழ்ப்பாணத்தில் தேர்தல் மோசடிகளை முன்னெடுத்தனர். பின்னர் யாழ்ப்பாணப் பொது நூலகத்தை எரித்தனர். இவ்வாறான வரலாற்றுப் பின்னணியைக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பின்னால் செல்லும் அரசியல்வாதிகள் இன்று மார்தட்டி அரசியல் பேசுகின்றனர்" என கூறியுள்ளார்.
திருச்சி முகாமில் வருடக்கணக்கில் தனது மகளை பார்க்காமல் தவிக்கும் இலங்கை தாய்! விஜய்யிடம் விசேட கோரிக்கை
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கறுப்பு ஜூலை: குருதியாலும் ஆடைகளின்றியும் நடந்த இனப்படுகொலை... 9 மணி நேரம் முன்