கொழும்பில் கரை ஒதுங்கியது உலகின் மிகப்பெரிய ஆமை
Sri Lanka Police
Colombo
Sri Lanka
By Sumithiran
கொழும்பு பாணந்துறை கடற்கரையில் உலகின் மிகப்பெரிய கடல் ஆமை ஒன்று இன்று (03) பிற்பகல் கரை ஒதுங்கியுள்ளது.
இலங்கை கடற்பரப்பில் இவ்வாறான ஆமை இனங்களை காண்பது மிகவும் அரிதானது என பாணந்துறை கரையோர காவற்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆமை சுமார் 06 அடி 07 அங்குல நீளம் கொண்டது என தெரிவிக்கப்படுகிறது.
அழிவின் விழிம்பில்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆமை பாதுகாப்பு திட்டத்தின் தலைவர் கடல் ஆமை நிபுணர் துஷான் கபுருசிங்க,
"உலகின் மிகப்பெரிய ஆமை இனம் அழிவின் விழிம்பை எதிர்கொண்டுள்ளது.
வட இந்திய பெருங்கடல் நாடுகளில் இருந்து இலங்கை மற்றும் இந்திய அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் மட்டுமே இவை முட்டையிட வருகின்றன என குறிப்பிட்டார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்