காவல்துறைக்கு ஏற்பட்ட சிக்கல் - கண்ணீர் புகைகுண்டுகளை இறக்குமதி செய்ய டொலர் இல்லை
அடுத்த வருடத்திற்கு சிறிலங்கா காவல்துறைக்கு தேவையான கண்ணீர்ப்புகை மற்றும் தோட்டாக்கள் மற்றும் ஏனைய பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் விநியோகஸ்தர்களுக்கு தேவையான டொலர்களை வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.
டொலர்களை வழங்குவதில் நெருக்கடி
எனினும், பொருட்களை இறக்குமதி செய்வது கடினமாக இருந்தாலும், முன்னர் கொண்டு வரப்பட்டு களஞ்சியசாலைகளில் உள்ள பொருட்களை சிக்கனமாக பயன்படுத்த முடியும் என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
2022 இல், இந்த பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வது சிக்கலாக மாறியுள்ளது, ஆனால் அது பின்னர் தீர்க்கப்படும்.
அதிகரித்த கண்ணீர்புகை குண்டு பாவனை
இதேவேளை அண்மைக்காலமாக அரசுக்கு எதிராக தென்னிலங்கையில் இடம்பெறும் ஆர்ப்பாட்டங்களை கலைக்க காவல்துறையினர் பெருமளவில் கண்ணீர் புகை பிரயோகத்தையே மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.