திலீபனின் நினைவூர்தியை விடாது துரத்தும் புலனாய்வாளர்கள்(படங்கள்)
தியாகதீபம் திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவையொட்டிய பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான ஊர்திப் பவனி இன்று நான்காவது நாளாக இடம்பெற்று கிளிநொச்சி சென்றடைந்துள்ளது.
ஊர்திப் பவனி நேற்று (17) திருகோணமலையில் தாக்குதலுக்கு உள்ளான பின்னர், இன்று 4 ஆம் நாள் பவனியாக புதிதாக இன்னும் ஒரு ஊர்தியுடன் மாங்குளம் நகரில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணத்தை ஆரம்பித்தது.
இன்றைய நாள்(18) பயணம் கிளிநொச்சியில் முடிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை(19)வட்டக்கச்சியில் இருந்து ஆரம்பமாகும் ஊர்திப் பவனி கிளிநொச்சி பொதுச் சந்தை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம், பரந்தன், தருமபுரம், விசுவமடு, உடையார் கட்டு, புதுக்குடியிருப்பு ஊடாக முல்லைத்தீவு சென்றடையவுள்ளது.
உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி
திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திக்கு தமிழ் மக்கள் உணர்வெழுச்சியுடன் மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஊர்திப் பவனியின் பின்னால் அரச புலனாய்வாளர்கள் பின்தொடர்ந்து செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.