தியாக தீபம் - 39 : தாயகம் மற்றும் புகலிடத்தில் உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல்கள்!
தமிழர் தாயகத்தின் முதன்மை அறவழி தியாகியான தியாகதீபம் திலீபனின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயகத்தில் அவரது நினைவாலயம், அமைந்துள்ள நல்லூர், உட்பட பல இடங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் புலம்பெயர் நாடுகளிலும் இன்று (26) காலை முதல் நினைவேந்தல் நிகவுகள் நடைபெற்று வருகின்றன.
தியாகி திலீபனின் நினைவேந்தலின் ஒரு பகுதியாக, அவரது நினைவாக நடத்தப்பட்ட நினைவு ஊர்திப் பயணமும் நல்லுரில் இன்று நிறைவடைகின்றது.
நினைவு ஊர்திப் பயணம்
அம்பாறை மாவட்டம் பொத்துவிலில் இருந்து கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான இந்த நினைவு ஊர்திப் பயணம் மட்டக்களப்பு, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கடந்து, நேற்று (25) யாழ் வடமராட்சிப் பகுதியால் பயணித்து நல்லூரை சென்றடைந்துள்ளது.

இந்த நிலையில், அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் மற்றும் சிட்னி ஆகிய நகரங்களில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றுள்ள நிலையில் பிரித்தானியா, பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மனி உட்பட்ட ஐரோப்பிய நாடுகளில் இன்று காலை நிகழ்வுகள் ஆரம்பிக்கவுள்ளன.
அதன்படி, பிரான்சில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பரிசின் புறநகர் பகுதியான ஆர்ஜென்தெய் பகுதியில் உள்ள திலீபன் நினைவுக்கல் முன்பாக அடையாள உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெறவுள்ளது.
பிரித்தானியாவை பொறுத்தவரை பிரதமர் வதிவிடம் உட்டபட்ட இடங்களில் நிகழ்வுகள் இடம்பெறுகின்றன, பிரதமர் வதிவிடம் முன்பாக காலை 11.00 மணியில் இருந்து மாலை 5.00 மணி வரை உணவு தவிர்ப்புப் போராட்டமும் நினைவுரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |