மௌனிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கம்! அரசியலுக்கு ஆதாயமாகும் மறவர் தியாகங்கள்
விடுதலைப்புலிகளின் நிழல் அரசாங்கம் சிதைக்கப்பட்டதன் பின்பு அரசியல் ரீதியான தலைமைத்துவத்தையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்களுக்கு விடுத்து வந்தது எனவும் மாவீரர் சார்ந்த வரலாற்றை அவர்கள் முன்னெடுக்கவில்லை எனவும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் கதிர் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தமிழீழ விடுதலை புலிகள் எந்தவொரு கால கட்டத்திலும் எந்தவொரு கட்சிகளுடனும் இணைந்து ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.
மக்கள் முன்னணி யுத்தம் நிறைவடைந்ததன் பின்பு விடுதலைப்புலிகளின் வரலாற்றை தங்கள் கையில் எடுத்துக்கொண்டு தாம் தான் அடுத்த கட்ட நகர்வுக்காக தயார் படுத்தபட்டவர்கள் என பொய் பிரச்சாராம் செய்து வருகின்றார்கள் என குற்றம் சுமத்தினார்.
மேலும், மாவீரர்களுடைய தியாகங்களை தமது அரசியலுக்காக பயன்படுத்திக்கொண்டு முன்னாள் போராளி கூட மாவீரர்களுக்கு சுதந்திரமாக அஞ்சலி செலுத்தும் உரிமையை கூட முன்னணி பறித்து விட்டதாகவும் அஞ்சலி செலுத்த வேண்டும் என்றால் நாம் மக்கள் முன்னணியினராய் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதவேளை விடுதலைபுலிகளுக்கும் தமிழ் காங்கிரசுக்கும் வரலாற்று ரீதியாக என்ன தொடர்பு என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐபிசி தமிழின் சக்கரவியூகம் நிகழ்ச்சி


புத்திர சோகத்தில் ஈழ அன்னையர்கள்... இன்று அன்னையர் தினம்… 13 மணி நேரம் முன்
