திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை

Sri Lankan Tamils Trincomalee
By Vanan Sep 17, 2023 02:45 PM GMT
Report

தியாக தீபம் திலீபனின் ஊர்திப் பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் நடத்திய கொடுந்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் சோழன் மு. களஞ்சியம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தாக்குதல் சம்பவம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள  கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  “தியாக தீபன் திலீபனின் ஊர்தி பவனி வாகனத்தின் மீது சிங்கள இனவெறிக் கும்பல் கொடுந்தாக்குதல் நடத்தியுள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தது.

இனவெறிக்கும்பலின்  கொடுந்தாக்குதல்

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

திலீபனின் ஊர்தியை அடித்து நொறுக்கிய காடையர்கள்! தமிழ் எம்.பி மீது வெறித் தாக்குதல் (காணொளி)

பன்னாட்டு அளவில் ஐ.நா. முன்பு பெரும் கவனயீர்ப்பு மாநாடு நடந்தேறுகிற இந்த நேரத்தில், இது போன்ற கொடுந்தாக்குதல்களை இலங்கை சிங்கள இனவெறிக்கும்பல் நடத்துவது கவனம் கொள்ளத்தக்கது.


இன்னும் தாயகத்தின் நிலை என்னவென்பதை தெரியப்படுத்தும் நிலை இது. 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைதியான முறையில் சிங்களர்களின் இனவெறியைக் கண்டித்து 12 நாட்கள் உண்ணா நோன்பு இருந்து உயிர் நீத்த திலீபனின் வரலாற்றை பறைசாற்றும் விதமாக இந்த ஊர்தி பவனி நிகழ்வு நடைபெற்றுள்ளது.

ஆனால், இந்தத் தாக்குதல் வழியாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது இன்னும் சிங்களர்களின் இனவெறி அடங்கவில்லை என்பதே!

இந்நிலையில் திருகோணமலை கப்பல்துறை பகுதியில் 17.09.2023 ஞாயிற்றுக்கிழமை இன்று ஊர்திப் பவனி வந்துள்ளது, அங்கு இலங்கையின் தேசியக் கொடியுடன் வந்த சிங்களக் காடையர்கள் ஊர்திப் பவனி மீது தாக்குதல் மேற்கொண்டு, தியாக தீபத்தின் உருவ படத்தினையும் அதில் கலந்து கொண்ட தமிழர்களையும் தாக்கியுள்ளனர்.

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இனவாத இலங்கை அரசை கண்டிக்க வாய் திறக்குமா இந்தியா : சீமான் ஆவேசம்

இராணுவம், காவல்துறை முன்னிலையில்

இந்தத் தாக்குதல் சிங்கள இராணுவம், காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. அதன் காணொளி காட்சியை கண்ட போது நெஞ்சம் பதைக்கிறது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

சர்தாபுர பகுதியில் சிங்கள இனத்தைச் சேர்ந்த மக்கள் கற்களை நடுவீதியில் போட்டு, வீதியை வழிமறித்துள்ளனர். அந்தப் பகுதியில் காவல்துறையினர், இராணுவம், புலனாய்வுத்துறையினர் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

யாரும் இத்தாக்குதலைத் தடுக்கவில்லை. முகத்தை கருப்புத்துணியால் கட்டிய சிங்கள இளைஞரொருவன் பெரிய கல்லினால் வாகனத்தை தாக்கும் காட்சி நம்மை நடுங்க வைக்கிறது.

தொடர்ந்து வாகனம் முன்னேறிய நிலையில், வீதியின் குறுக்கே தடைகளை ஏற்படுத்தி காத்திருந்த, ஆண்களும், பெண்களும் நிறைந்திருந்த கூட்டம், வாகனத்தை சுற்றிவளைத்து, தடிகளால் அடித்து தாக்குவது வேதனைக்குரியது.

சிங்கள மக்களுக்குள் இருக்கும் இனவெறி என்றுமே மாறாது என்பதை இந்நிகழ்வு மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பித்து, ஊர்தியை திருப்பி அருகிலுள்ள தம்பலகாமம் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில், அங்கேயே தங்கியுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், சட்டத்தரணி ந.காண்டீபன் ஆகியோரும் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர்பிழைத்ததே பெருஞ்செயல்.

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

திருகோணமலையில் தியாகதீபம் திலீபனின் ஊர்திப் பவனிமீது காடையர் குழு தாக்குதல்

பேரினவாத அரசு பின்புலத்தில்  

இலங்கை பெளத்த சிங்கள பேரினவாத அரசு பின்புலத்தில் இருந்து கொண்டு இந்த கொடுந்தாக்குதலை அரங்கேற்றியுள்ளது.

திலீபனின் ஊர்திப் பவனி மீதான தாக்குல்: தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் கண்டன அறிக்கை | Thileepan Vehicle Attack Trinco

மக்களால் தேர்வு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களின் நிலை என்ன அங்கே எப்படி இருக்கும் என்பதை சர்வதேச சமூகம் இதன் வழியாகவாவது புரிந்து கொள்ளட்டும்.

சிங்கள மக்களோடு, தமிழ்மக்கள் எந்த காலத்திலும் இணைந்து வாழவே முடியாது என்பதே இந்த கொடுஞ்செயல்கள் நமக்கு காட்டும் படிப்பினை!

இந்தத் தாக்குதல்களை ஐ.நா. கவனயீர்ப்பு மாநாட்டுக் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021