மாணவர்களின் செயலால் பெற்றோருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
திம்புலாகல மகுல்தமன மகா வித்தியாலயத்தில் பாடசாலையின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்திய மாணவர்களின் பெற்றோர்கள் நஸ்டஈடு தருவதாக அதிபர் முன்னிலையில் உறுதியளித்துள்ளதாக மானம்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பாடசாலையில் இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய 6 மாணவர்கள் பாடசாலையின் உபகரணங்கள், மின் விசிறிகள், மலசலகூட கதவுகளை உடைத்து பல சொத்துக்களுக்கு நாசம் விளைவித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நஷ்டஈடு
இது தொடர்பாக மானம்பிட்டிய காவல் நிலைய பொறுப்பதிகாரி அசேல சரத் குமார தெரிவிக்கையில்,
“பாடசாலையின் அதிபர் காவல்துறைக்கு வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் காவல்நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சேதப்படுத்தியவற்றுக்கான நஸ்டஈடு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.
