இலங்கையில் இன்று மட்டும் மூன்று துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் -இருவர் பலி
Sri Lanka Police
Shooting
Sri Lanka
By Sumithiran
அதிகரிக்கும் துப்பாக்கி சூடு
எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் இன்று (ஓகஸ்ட் 24) மாலை ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நாட்டில் இன்று பதிவான மூன்றாவது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இதுவாகும்.
கம்பஹா, படபொத்த குருச ஹண்டியா என்ற இடத்தில் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் கட்டடப் பொருட்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர் கொல்லப்பட்டார்.
இன்று மட்டும் மூன்று சம்பவம்
இதேவேளை, அஹுங்கல்ல, கட்டுவில பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் மற்றுமொருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த நிலையிலேயே இன்றுமாலை எல்பிட்டிய, உருகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 20 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி