வரலாற்றுச் சிறப்பு மிக்க திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெரு விழா ஆரம்பம்
Tamils
Mannar
Hinduism
By Shadhu Shanker
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா இன்று (13.05.2024) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு கருணாணந்த குருக்கள் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான சுப நேரத்தில் கொடியேற்றம் இடம் பெற்றது.
தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
கொடியேற்றத்துடன் ஆரம்பம்
அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கொடிக் கம்பத்திற்கு முன் எழுந்தருளியதை தொடர்ந்து விசேட வழிபாடுகள் இடம்பெற்றன.
அதனை தொடர்ந்து கொடிக் கம்பத்திற்கு விசேட அபிஷேகம் இடம் பெற்றது. அதனை தொடர்ந்து கொடியேற்றும் விழாவில் இடம்பெற்றது.
இதன் போது கொடியேற்ற பெரு விழாவில் பல நூற்றுக்கணக்கான அடியார்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 8 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்