படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச

Sri Lanka Army Jaffna chemmani mass graves jaffna
By Independent Writer Oct 25, 2026 08:32 AM GMT
Report

யாழ்ப்பாணத்தில் 1996ஆம் ஆண்டு காலப்பகுதியில் படையினரால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் செம்மணியில் புதைக்கப்பட்டதாகத் தான் ஏற்கனவே வெளிப்படுத்திய தகவல்கள் முற்றிலும் உண்மையானவை என்று மரண தண்டனைக் கைதியான லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.

அவற்றைத் தான் சுயநினைவுடனேயே வெளிப்படுத்தியதாகவும், தற்போது செம்மணி - சித்துபாத்தி மயானத்தை அண்மித்த பகுதியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள மனித எலும்புக்கூடுகளில் படையினரால் கொல்லப்பட்டோரின் எலும்புக்கூடுகளும் இருக்கக்கூடும் எனவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில, சோமரத்ன ராஜபக்‌ச அவரது சகோதரி ஊடாக ஊடகமொன்றின் கேள்விகளுக்கு அனுப்பிவைத்த பதில்களில் மேற்குறித்த விடயங்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

முடிவுக்கு வரும் பிக்குகளின் சத்யாகிரகப் போராட்டம்: நீதிமன்றத்தை நாடும் காவல்துறை

முடிவுக்கு வரும் பிக்குகளின் சத்யாகிரகப் போராட்டம்: நீதிமன்றத்தை நாடும் காவல்துறை

கிருஷாந்தி குமாரசுவாமி கொலை

அண்மையில் அகழ்வுப்பணிகள் மூலம் 500க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்ட செம்மணி பகுதியில் படையினரால் கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டார்கள் என உறுதியாக நம்புவதாகவும் சோமரத்ன ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச | Those Killed By The Army Were Buried In Chemmani

அத்துடன் 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்கள் செம்மணி சோதனைச்சாவடிக்கு அண்மையில் கண்டறியப்பட்டபோது, அதுகுறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்த மருத்துவர், அந்த உடல்கள் யாருடையவை என்பதை அடையாளம் காணமுடியாது என்றும், அந்த உடல்கள் மனித என்பு எச்சங்களுக்கு இடையிலிருந்து கண்டறியப்பட்ட எலும்புக்கூடுகள் என்றும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் பின்னர் இந்த வழக்கில் அரசாங்கத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, மருத்துவ அறிக்கைகளின்படி மேற்படி உடல்கள் கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்பத்தினருடையவை என அடையாளம் காணப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது என்றும் விளக்கமளித்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு செம்மணியை அண்மித்த பகுதிகளில் இருந்து 15 உடல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் சில உடல்கள் யாழ்ப்பாண மக்களால் அடையாளம் காணப்பட்டன.

அதுபற்றி என்னால் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களை அடுத்து, அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் சிலர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலியில் கொட்டும் மழையிலும் போராட்டம்!

சொந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பலாலியில் கொட்டும் மழையிலும் போராட்டம்!

சித்துபாத்தியில் கண்டறியப்பட்டுள்ள உடல்கள்

அத்தோடு அக்காலப்பகுதியில் செம்மணி சோதனைச்சாவடியில் சுமார் 400 பேர் வரை கைதுசெய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டோரில் ஒரு பகுதியினரின் உடல்கள் செம்மணியை அண்மித்த பகுதிகளுக்கும், மற்றொரு பகுதியினரின் உடல்கள் வேறு பகுதிகளுக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகவும் நான் வெளிப்படுத்தியுள்ளேன்.

அதுமாத்திரமன்றி பல உடல்கள் மயானப்பகுதிக்கு அண்மையிலும் செம்மணியை சூழவும் புதைக்கப்பட்டதாகவும் நான் கூறியிருக்கிறேன்.

படையினரால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டனர் : மீண்டும் உறுதிப்படுத்திய சோமரத்ன ராஜபக்‌ச | Those Killed By The Army Were Buried In Chemmani

எனவே தற்போது மயானப்பகுதியில் (சித்துபாத்தி) கண்டறியப்பட்டுள்ள உடல்களில் படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் உடல்களும் இருக்கக்கூடும்' என்றும் சோமரத்ன ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க மரணதண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்‌ஷவிடம் மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனுக்கு யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பு

திலீபன் சிலை விவகாரம் : கஜேந்திரனுக்கு யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024