போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் - நாமல்
கைது
போராட்டக்களத்தை வழிநடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன் போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய இளைஞர்களை சமூகமயப்படுத்தும் வேலைத்திட்டமொன்று அவசியம் எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
போராட்டக்காரர்களுக்காக புனர்வாழ்வு பணியகங்களை அமைக்கும் திட்டம் உள்ளதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், போராட்டக்களத்துடன் தொடர்புடைய அப்பாவி இளைஞர்களும் இருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
அவர்களை சிறையில் அடைத்து, தடுத்து வைத்து குறைந்தபட்சம் வேலையொன்றையேனும் பெற்றுக் கொள்ள முடியாதவாறான சூழலை ஏற்படுத்துவது பிழையான விடயமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது மதிய நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்,
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)