திருடப்பட்ட மடிக்கணினிகள் : சந்தேகநபர்கள் கைது!
பேருவளை பகுதியில் அமைந்துள்ள கல்லூரி ஒன்றில் ஸ்மார்ட் வகுப்பறையை உடைத்து 12 மடிக்கணினிகளைத் திருடிய குற்றச்சாட்டில் அதே பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கை, பாதுக்க காவல்துறையினரால் இன்று (25) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, அடுத்த வருடம் க.பொ.த பொதுப் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள 16 வயதுடைய மாணவர்கள் இருவர் மற்றும் பாணந்துறை, பாதுக்க பிரதேசங்களில் வசிக்கும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் விசாரணை
கடந்த பெப்ரவரி மாதம் பௌர்ணமி தினத்தன்று பேருவளை ஆரியவன்ச கல்லூரியின் வகுப்பறைக்குள் மடிக்கணினி உடைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
இதனையடுத்து, குறித்த பாடசாலை மாணவர்கள் இருவர் மடிக்கணினிகளை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், திருடப்பட்ட 12 மடிக்கணினிகள் பாதுக்க பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..! |