அமெரிக்க அதிபர் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது!
அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர் விவேக் ராமசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி குடியரசுக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடுகிறார்.
இதனை தொடர்ந்து விவேக் ராமசாமியையும் அவரின் பரப்புரை கூட்டங்களில் கலந்து கொள்பவர்களையும் கொலை செய்ய உள்ளதாக ஒருவர் மிரட்டல் விடுத்திருந்தார்.
கொலை மிரட்டல் ஆதாரங்கள்
டைலர் அன்டர்சன் (Tyler Anderson)என்ற நியூ ஹாம்ப்ஷயர், டோவர் பகுதியை சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்த நபரின் அனுப்பிய குறுஞ்செய்திகளில் கொலை மிரட்டல் விடுத்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்க நீதித்துறை உறுதி செய்துள்ளது.
விவேக் ராமசாமியின் பரப்புரை நிர்வாகிகளுக்கு குறுஞ்செய்தி கிடைக்கப்பெற்றதையடுத்து உடனடியாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
விவேக் ராமசாமி
கொலை மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணும் கைது செய்தவரின் தொலைபேசி எண்ணும் தொடர்புபட்டதை தொடர்ந்தே அவர் கைத செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விரைந்த செயற்பட்டு அவரை கைது செய்த சட்ட நடைமுறையாக்க அமைப்புகளுக்கு விவேக் ராமசாமி நன்றி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஆண்டர்சன் ஐந்து ஆண்டு சிறைத்தண்டனைமூன்று ஆண்டுகள் வரை மேற்பார்வையிடப்பட்ட விடுதலை மற்றும் $250,000 வரை அபராதம் என்பவற்றை எதிர்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |