வவுனியாவில் காவல்துறை விசாரணையில் சிக்கிய பெண் உள்ளிட்ட மூவர்!
வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார்சைக்கில் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பெண் உட்பட மூவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று நாட்களுக்கு முன் வவுனியா, ச.தொ.ச வீதியில் குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளில் உரிமையாளர் , வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேற்கொள்ளப்பட்ட விசாரணை
குறித்த முறைப்பாட்டுக்கமைய, வவுனியா தலைமைக் காவல் நிலைய பொறுப்பதிகாரி பீ.எஸ்.வீரத்தின அவர்களின் வழிகாட்டலில், வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவில் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டனர்.

இதன்போது இரணை இலுப்பக்குளம்மடு பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய கணவர் 25 வயதுடைய மனைவி மற்றும் 31வயதுடைய மனைவியின் மைத்துனர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் ரூபாய் மூன்று இலட்சம் பெருமதியான மோட்டார்சைக்கிள் மீட்கப்பட்டது.
அத்துன், குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா காவல் நிலைய குற்றத் தடுப்பு பிரிவினர் சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |