அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நியமித்த புதிய தலைவர்கள்!!
சுற்றுலாத்துறையின் முக்கிய நிறுவனங்களுக்கு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, இலங்கையின் ஹோட்டல் மேலாண்மை மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் தலைவராக ஷிரந்த பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
மற்றும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக பிரியந்த பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இலங்கையின் சுற்றுலா ஊக்குவிப்பு சபையின் தலைவராக சாலக கஜபாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர்கள் மூவரும் சுற்றுலாத் துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த மற்றும் அறிவுள்ள நபர்கள் என்றும், அவர்கள் சர்வதேச அளவில் பரந்த அளவிலான வெளிப்பாட்டைக் கொண்டவர்கள் என்றும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அவர்கள் தங்கள் திட்டமிடல் திறன் மற்றும் முன்னாள் அனுபவங்கள் மூலம் குறுகிய காலத்தில் சுற்றுலாத்துறையை பெரும் வெற்றிக்கு இட்டுச் செல்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அவர்களின் எதிர்கால சவால்களில் அவர்கள் அனைவரும் வெற்றிபெற வாழ்த்துகிறேன் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.