கனடாவில் வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட மூவரின் சடலம்
Toronto
Canada
By Sumithiran
கனடாவில் வீடொன்றிலிருந்து மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் என்ற பகுதியில் மெக்கேய் வீதி யாங் வீதி அமைந்துள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்து
வியாழன் மாலை 4:15 மணியளவில் காவல்துறையினருக்கு கிடைத்த தொலைபேசி தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் குறித்த வீட்டை சோதனையிட்டபோது இந்த சடலங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டவர்களின் விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.மரணத்திற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்ரே தெரியவரும் என காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தால்
சம்பவம் தொடர்பில் ஏதாவது தகவல் தெரிந்தால் அதனை தெரிவிக்க முன்வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி