100 அடி பள்ளத்தில் விழுந்து முச்சக்கர வண்டி விபத்து
முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து சம்பவம் ஹட்டன் (Hatton) - கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த போதே, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானது.
மேலதிக விசாரணை
அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவு ஒன்றில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

விபத்து இடம் பெற்றபோது, வெளிநாட்டிலிருந்து வருகை தந்த நபர் ஒருவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார்.
இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வட்டவளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |