எரிபொருளுக்காக ஆட்டோக்களால் மூடப்பட்ட பிரதானவீதி (படம்)
Ceylon Petroleum Corporation
Sri Lanka
Sri Lankan Peoples
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் தட்டுப்பாடு
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு பாரியதொரு நெருக்கடியை உருவாக்கியுள்ளது.அரச தரப்பு மற்றும் தனியார்துறை என்பன பெரும் நெருக்கடிக்குள் சிக்கி தவிக்கின்றன.
கை கொடுத்த ஐஓசி
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விநியோகத்தை முற்றாக கைவிட்டுள்ள நிலையில் தற்போது யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல தனியார் வாகனங்களுக்கான எரிபொருள் ஐஓசி நிரப்பு நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கப்படுகிறது.
இதனால், அந்த நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் பல நாட்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியுள்ளது.
மூடப்பட்ட பிரதானவீதி
இவ்வாறான எரிபொருள் வரிசையினால் கதுருவெல நகரின் பிரதான வீதி முச்சக்கர வண்டிகளால் மூடப்பட்டிருப்பதை காணலாம்.


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்